செம்மணிப் புதைகுழி: சர்வதேச தலையீட்டை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 17ஆம் திகதி போராட்டம்


செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும், செம்மணி புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும், 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழர்களின் அடுத்தகட்ட தந்திரோபாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

சிவில் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், எட்டப்பட்ட ஒருமித்த தீர்மானத்தின்படி, செம்மணியில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும் மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு செம்மணி பகுதியில் இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்தில் அரசியல் உணர்வும் சமூகப் பொறுப்பும் கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments