2 ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள் மற்றும் 43,726 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில் 4,056 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளில் 97 T-56 ரக துப்பாக்கிகளும், ஒரு AK-47 ரக துப்பாக்கியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 143 கைத்துப்பாக்கிகள், 105 ரிவோல்வர்கள் மற்றும் 397 ரக 12-போர் துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில் 597,964 போதைப்பொருள் தொடர்பான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சோதனைகளுடன் தொடர்புடையதாக 596,591 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 4,009 கிலோகிராம் ஹெரோயின், 6,526 கிலோகிராம் ஐஸ் மற்றும் 28,441 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட மொத்தம் 43,726 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 224 பில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment