அழிக்கப்பட்ட துயிலுமில்லக் கல்லறைக் கல்வெட்டுகளுடன் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!


மாவீரர் நாள் இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் கோப்பாய் பகுதியில் மாவீரர் நினைவாலயம் இன்றைய தினம் வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட நிலையில் வித்துடல்கள் விதைக்கப்பட்ட  கல்லறையின் கல்வெட்டுக்களை நினைவாக பேணி , நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை மாவீரர் நாள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு , 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றல் இடம்பெறும்.







No comments