மன்னாரில் புதையல் தோண்டிய நபர் கைது
மன்னார் காவல்துறையினருக்கு பிரிவிற்குட்பட்ட எருக்குலம்பிட்டி - தர்ஷினநகர் பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வராய்ச்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட எருக்குலம்பிட்டி - தர்ஷினநகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, புதையல் தேடும் நோக்கத்துடன் அகழ்வராய்ச்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபராவார்.
இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்ற போது குறித்த இடத்தில் இருந்த மற்றுமொரு நான்கு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

Post a Comment