யாழ். குடாநாட்டில் தொடரும் மழை


யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, நாளைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் மழை தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திடீரெனப் பெய்து வரும் மழை காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் வெள்ள நீர் காணப்படுகிறது, அத்துடன் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழையுடன் சேர்த்து பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கரையோரப் பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments