திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கழுத்தறுத்து படுகொலை!


திருகோணமலையில் விடுதி ஒன்றின் உரிமையாளரான 56 வயதுடைய நபர் குழுவொன்றினால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட நபர் விடுதியில் தனியாக இருந்தவேளையில், அடையாளம் தெரியாத குழுவினர்  இந்த படுகொலையைச் செய்திருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகத் திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 


No comments