நெடுந்தீவிலிருந்து தாயாரின் நினைவாக கடலில் விடப்பட்ட சிறிய படகு : தமிழகக் கரையில் ஒதுங்கியதால் பரபரப்பு!
யாழ்ப்பாணம் , நெடுந்தீவில் மரணித்தவரின் நினைவாக கடலில் விடப்பட்ட படகினால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் , மண்டபம் கடற்கரையை அண்டிய பகுதியில் மரத்திலான , சிறிய படகொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியுள்ளது.
அதில் வேறு பொருட்களோ , நபர்களோ காணப்படாத நிலையில் "பவள ரதம்" என பெயர் குறிக்கப்பட்டு இருந்ததுடன் , "WARD No.13 DELFT EAST SRI LANKA " எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை நெடுந்தீவு பகுதியில் காலமான தமது தாயாரின் நினைவாக, சிறிய ரதம் ஒன்றினை செய்து, ரதத்தில் அவரின் ஒளிப்படம் வைக்கப்பட்டு, அந்த சிறிய ரதத்தை சிறிய ரக படகொன்றில் வைத்து கடலில் விடப்பட்டது என தெரியவந்துள்ளது.

Post a Comment