அனுர அரசிற்கெதிராக பங்காளிகள் போராட்டம்!



தேசிய மக்கள் சக்தி அரசிற்கு எதிராகவும் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (30) அனைத்து அரச பல்கலைக்கழக அமைப்புகளுக்குள்ளும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிக பணிச்சுமை, போதுமான பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளே முன்வைத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்;கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு இணையாக நாளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் பேரணி ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.

அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடமேறுவதில் முக்கிய பங்கினை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் முக்கிய பங்கினையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments