நடக்கும் ஆனால் நடக்காது?



மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிததுள்ளார்.

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையாக யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மாகாணசபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

ஏனெனில் 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.

தேர்தல் முறைமை குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எம்மால் எடுக்க முடியும்.

நாடாளுமன்ற செயற்குழு விரைவான தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


No comments