நேட்டோ உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் கீவ் பயணம்: உக்ரைனுக்கு தொடரும் ஆதரவு
நேட்டோ கூட்டணியில் உக்ரைன் உறுப்பினராக இல்லாத நிலையிலும், நேட்டோவின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவுக்கு கூட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பயணம் உக்ரைனுக்கான கூட்டணியின் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்துவதுடன், ரஷ்யாவுக்கு நேட்டோ நாடுகளின் ஒற்றுமையையும் உணர்த்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி நானரை ஆண்டுகளுக்குப் பின்னர், நேட்டோவின் உயர்மட்டக் குழு அதன் 32 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கீவில் கூடியது.
குழுவின் தலைவரான கியூசெப்பே காவோ டிராகோன், உக்ரைனுக்கு நேட்டோ வழங்கி வரும் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்று வலியுறுத்தினார்.
நேட்டோவின் உயர்மட்ட இராணுவத் தலைமையின் இந்தப் பயணம், உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவுடனான போரின் தற்போதைய சூழலில் கூட்டணியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

Post a Comment