நீதி நிச்சயம் கிட்டும்!
வடக்கு - கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் யாழ். ஊடக அமையத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெறுள்ளது.
இலங்கை அரசின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய தினம் திங்கட்கிழமை (26) யாழ். ஊடக அமையத்திற்கு வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக் கலந்துரையாடலின் போது யாழ். ஊடக அமையத்தினரால் வடக்கு - கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் கடத்தப்பட்டுப் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விவகாரம் ஊடக நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான உண்மை நிலவரங்களை வெளிக்கொணர்தல் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசாங்கம் தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு ஊடகவியலாளர்கள் என்ற பிரிவினையோடு நோக்குவதில்லை. கடந்த கால ஆட்சியாளர்கள் போல் நாங்கள் செயற்படப்போவதில்லை. எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீர்ப்புகள் எல்லாம் எங்கள் ஆட்சியில் வந்துகொண்டிருக்கின்றன."
"படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் எங்களுடைய காலத்தில் நீதியை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அதற்காக எங்களுக்கான கால அவகாசத்தை மாத்திரம் தாருங்கள்."
"ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய உத்தியோகபூர்வ மகஜர் ஒன்றினை என்னிடம் ஒப்படையுங்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உரிய தரப்புகளை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்திப்பின் போது, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகரசபை உறுப்பினருமான கபிலன் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது.

Post a Comment