மாத்தறையில் 475 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் படகு மீட்பு


மாத்தறை,கடற்கரைப் பகுதிகளில் இன்றைய தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 475 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்துக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இந்தக் கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடற்கரையில் போதைப்பொருட்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 10 மூட்டைகள் மற்றும் 11 பயணப் பொதிகளுடன் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளில், 200 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளும், 275 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments