யாழ்.கடற்பிராந்தியத்தில் பெருந்தொகை போதை பொருட்களுடன் , ஒருவர் கைது


யாழ்ப்பாண கடற்பிராந்தியத்தில் பெருந்தொகை போதை பொருட்களுடன் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் 

மாதகல் , குசுமந்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகினை , கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பு படகு மடக்கி பிடித்துள்ளது 

அதனை தொடர்ந்து குறித்த படகினுள் கடற்படையினர் சோதனை செய்த வேளை , படகினுள் பெருந்தொகையான போதைப்பொருட்கள் காணப்பட்டுள்ளன 

அதனை அடுத்து படகில் இருந்தவரை கைது செய்ததுடன் , படகினையும் கைப்பற்றி கரை சேர்ந்தனர் 

கைப்பற்றப்பட்ட படகில் சுமார் 35 கிலோ ஹெரோயினும் , சுமார் 45 கிலோ ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது 

கைது செய்யப்பட்ட நபர் , கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருள் என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் 

No comments