சமல் ராஜபக்ஷவிடம் 2 மணிநேரம் விசாரணை


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கான எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

குறித்த விமானக் கொள்வனவு இடம்பெற்ற காலப்பகுதியில் நிலவிய சூழ்நிலைகள் மற்றும் அதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சமல் ராஜபக்ஷ ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்.

No comments