விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட முதல் பிரச்சுப் பெண்!!
அமெரிக்க விண்வெளி வீரர் அனில் மேனனுடன் இணைந்து, சோஃபி அடெனாட் நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வெளியே விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்ட முதல் பிரெஞ்சு பெண் விண்வெளி வீரர் ஆனார்.
நாசாவின் தகவல்படி, சுமார் ஆறரை மணி நேரம் நீடித்த இந்த பயணத்தின் போது, ஹூஸ்டனில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பு கொள்ள உதவும் ஆண்டெனாவை மாற்ற இரு விண்வெளி வீரர்கள் முயற்சி செய்தனர்.
பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறிய பிறகு, 44 வயதான அடெனாட், நான் வெளியே வந்துவிட்டேன். இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன் என்று கூறினார்.
44 வயதான அடெனோட், இத்தாலிய விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டியின் 2022 ஆம் ஆண்டு பயணத்திற்குப் பின்னர் விண்வெளியில் நடந்த இரண்டாவது ஐரோப்பியப் பெண்மணி ஆனார்.

Post a Comment