வங்கி முகாமையாளர்கள் கைது!

 


சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய ஊழல் வலையமைப்புடன் தொடர்புடைய நான்கு முன்னணி தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களும் அந்தந்தத் தனியார் வங்கிகளிலேயே வைத்து கைதாகியுள்ளனர்.

இலங்கையில் இத்தகைய வழக்கு ஒன்றோடு தொடர்புடைய வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை எனப் காவல்துறை தெரிவித்துள்ளது.

மோசடியின் பின்னணியில் கைதாகியுள்ள முஸ்லீம் வர்த்தகர் நான்கு வங்கி அதிகாரிகளுக்கும் வாராந்த அடிப்படையில் பணம் செலுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்) தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இறக்குமதி தொடர்பிலான போலியான ஆவணங்களை சமர்ப்பித்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய குற்றச்சாட்டிலேயே கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றது.


No comments