நாடு திரும்பினால் இராணுவ வீடு!



யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக  அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

 வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதில் காணிகளை செப்பனிடுதல் முதல் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுதல், வீடுகளை உறுதியாக நிர்மாணிக்கும் பணிகள் முடியும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி வழங்கிய தீவிர மற்றும் சிறப்பான பங்களிப்பைக் பாராட்டி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.



No comments