மரணச் சான்றிதழ் வேண்டாம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பில் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாநாடொன்றை நடாத்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கம் முற்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசின் காணாமல் பேர்னோரிற்கான ஆணைக்குழு கூட்டமொன்றிற்கு அழைப்புவிடுத்துள்ளது.
''காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக குடும்பங்களை அழைத்து, ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு வருமாறு கோருவது கோரிவருகின்றது.
கிராம சேவகர்கள் மூலம் குடும்பங்களைத் தொடர்புகொண்டு தமது கூட்டங்களில் கலந்துகொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சில குடும்பங்கள் அச்சுறுத்தப்பட்டதாக அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
எந்த கிராம சேவகர் அதிகாரியோ அல்லது வேறு அரச அதிகாரியோ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை, மரணச் சான்றிதழை ஏற்றுக்கொள்ளவோ, வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவோ அச்சுறுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே உள்ளனர் என்பவை நம்பகமான சுயாதீன விசாரணையின் மூலம் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களின் குடும்பங்கள் மரணச் சான்றிதழை ஏற்றுக்கொள்ள அழுத்தப்படக்கூடாது" என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment