செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை


செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 

குறித்த ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

செம்மணி மனிதப் புதைக்குழி மூன்று கட்டங்களாக இதுவரையில் 110 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற நிலையில் இதுவரையில் 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. 

குறித்த அகழ்வு பணிகளில் இதுவரையில் 584 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அடையாளம் காணும் பொருட்டு , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணு சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவோம் என மேலும் தெரிவித்தார்.

No comments