இராணுவமே வெளியேறு ! - பருத்தித்துறையில் செப்.11ஆம் திகதி போராட்டம்


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எதிர்வரும் 11ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

பருத்தித்துறை நகரின் அபிவிருத்திக்கு , தடையாகவும்  புராதன இடங்கள் , வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து ஆரம்பமாகவுள்ள போராட்டம் பேரணியாக பிரதேச செயலகத்தை சென்றடையவுள்ளது. குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

No comments