முன்னோட்டம்:ஈஸ்டர் இருவருக்கு மரணதண்டனை!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பை இன்று அறிவிக்கும் போதே மரணதண்டனை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவல்களைப் பொருட்படுத்தாமல் கடமையை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி இன்றைய தினம் வழக்கு விசாரணையில் போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் தரப்பினால் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.
தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய தினம் மாலை, அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் இடம்பெறவிருந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு அறிவித்திருந்ததாக தெரிவித்தனர்.
அந்த தகவல்களைப் பெற்றிருந்த போதிலும், தாக்குதலைத் தடுப்பதற்கான எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், புலனாய்வு அதிகாரிகளின் கூட்டமொன்றை கூட்டி தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியிருக்க முடியும் என்றும், முப்படையினருடன் இணைந்து தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு இருந்ததாகவும் பெரும்பான்மை நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில், மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்படடுள்ளது.

Post a Comment