உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தியமை: ஈரான் மீது அமெரிக்கா பதிலடித் தாக்குதல்!!
வளைகுடாவில் அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரானிய இராணுவ மற்றும் கண்காணிப்புத் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே வான் பாதுகாப்பு அமைப்புகள், தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் ரேடார் தளங்கள் குறிவைக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவ மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
நேற்றுத் திங்களன்று நடந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாகவே தனது தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா கூறியது.
உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை ஈரான் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்கத் தாக்குதல்களால் ஒரு தொலைத்தொடர்பு கோபுரமும் இரண்டு நீர்த்தேக்கங்களும் சேதமடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்ததுடன், அமெரிக்கா ஜஸ்க் மற்றும் சிரிக் நகரங்களையும், வளைகுடாவில் உள்ள ஒரு தீவான கெஷ்மையும் குறிவைத்ததாகவும் கூறியது.

Post a Comment