வவுனியா மாநகரசபை அமர்வில் அமளிதுமளி: சபை அமர்வு ஒத்திவைப்பு!


உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22) திங்கட்கிழமை நடைபெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்பட்டது. 

வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல்செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து எட்டுமாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.

No comments