கிளிநொச்சி ஏ9 வீதி : கனரக வாகன கட்டுப்பாடு!





கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என இன்றைய (30) மாவட்டச் செயலக  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர்  தலைமையில் வீதி விபத்துக்களை தடுத்துல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காலை ஏழு மணி தொடக்கம் எட்டு மணிவரைக்கும் பின்னர் பகல் ஒரு மணி தொடக்கம் இரண்டு மணி வரைக்கும்  இரணைமடு சந்தி மற்றும் பரந்தன் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பாடசாலைகள் ஆரம்பித்தல் நிறைவுறும் நேரத்தை கருத்தில் எடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments