அமெரிக்காவில் ஸ்கைடைவிங் விமானம் விபத்துககுள்ளானது: 12 பேர் உயிரிழந்தனர்!!


அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்கைடைவர்ஸை ஏற்றிச் சென்ற தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் , அதில் இருந்த 12 பேரும் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேன்சஸ் சிட்டிக்குத் தெற்கே சுமார் 60 மைல் (100 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள பட்லர் மெமோரியல் விமான நிலையத்திற்கு அருகில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தை ஸ்கைடைவ் கேன்சஸ் சிட்டி நிறுவனம் இயக்கியது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 12 பேரும் உயிரிழந்தனர் என ஸ்கைடைவிங் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் விமான ஓட்டியும் ஒருவர்.

No comments