சுமந்திரனை காணோம்?

 


ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டார். 

நாடா வெட்டும் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி அருகில் நிற்கிறார். நினைவு கல்லை திரை நீக்கம் செய்து வைக்கிறார் 

ஆனால் ஜனாதிபதி ஊடக பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புகைப்பட தொகுப்பிலும் , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களிலும் நாடா வெட்டும் படங்களையோ, நினைவு கல்லை திரைநீக்கம் செய்யும் படங்களோ இல்லை. அந்த புகைப்பட தொகுப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்,ஏ சுமந்திரனின்  படங்களை காணவில்லை.

நூலக திறப்பு விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ன அடிப்படையில் கலந்து கொண்டார் ? ஒரு கட்சியின் செயலாளராக அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா ? நூலக திட்டமிடலோ , கட்டட ஆரம்பமோ , இவர்கள் உரிமை கோர முடியாது, அது பிள்ளையான் காலத்தான் இப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் , ஜனாதிபதி ஊடக பிரிவு நாடா வெட்டும் படத்தையும் , நினைவுக்கல் திரை நீக்கம் செய்யும் படத்தையும் தணிக்கை செய்துள்ளது. 


No comments