தமிழக கடற்தொழிலாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களால் மீட்பு
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளரை , நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர்
இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபரே மீட்கப்பட்டு , நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் \
சிறிய படகொன்றில் கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருப்பதாக நெடுந்தீவு கடற்தொழிலாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , தமது படகில் கடலுக்குள் விரைந்து தத்தளித்து கொண்டிருந்தவரை மீட்டு கரை சேர்ந்தனர்
கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பை அடுத்து , தமிழக கடற்தொழிலாளியின் படகு கடலில் அடித்து வரப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளியிடம் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment