ஹோர்முஸ் ஒப்பந்தத்திற்கான காலக்கெடுவை மீண்டும் நீடிக்கிறாரா டிரம்ப்?


ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கோ அல்லது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கோ வழங்கியிருந்த காலக்கெடுவை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மேலும் 24 மணி நேரம் நீட்டிப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, சனிக்கிழமையன்று, அவர் ஈரானுக்கு 48 மணி நேர கெடு எச்சரிக்கை விடுத்தார். இல்லையெனில், உள்கட்டமைப்புகள் மீதான பேரழிவுத் தாக்குதல்கள் வடிவில் நரகத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.

அது, அவருடைய 'ட்ரூத் சோஷியல்' ஆன்லைன் தளத்தில் இடம்பெற்ற, படிப்படியாக பதற்றத்தை அதிகப்படுத்தும், சில சமயங்களில் வசவுச் சொற்கள் நிறைந்த, பல பதிவுகளில் ஒன்றாகும்.

ஞாயிற்றுக்கிழமை மதியம், அவர் செவ்வாய், இரவு 8:00 மணி கிழக்கு நேரம் என்று மட்டும் குறிப்பிட்டு ஒரு புதிய பதிவை வெளியிட்டார்.

No comments