ஈரானில் போராட்டக்காரருக்கு ஆயுதங்கள் வழங்கியததை ஒப்புக்கொண்டார் டிரம்ப்
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது , ஈரானிய எதிர்க்கட்சிக் குழுக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாஷிங்டன் ஆயுதம் வழங்கியதாகவும், அந்த ஆர்ப்பாட்டங்களில் அரசாங்கப் படைகளின் அடக்குமுறைகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஃபாக்ஸ் நியூஸில் ட்ரே யிங்ஸ்டுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் முழுவதும் பிப்ரவரி 28 அன்று தாக்குதல்களைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பும், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் ஐரோப்பாவில் மூத்த ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதும், ஈரானிய அரசாங்கத்தை நிலை குலையச் செய்து கவிழ்க்கும் முயற்சிகளில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டிருந்ததாக அதிபர் கூறினார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் 38-வது நாளை எட்டியுள்ள நிலையில் , ஈரானில் குறைந்தது 2,076 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 26,000 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரானியப் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா துப்பாக்கிகளை அனுப்பியதாக அதிபர் டிரம்ப் என்னிடம் கூறினார். என யிங்ஸ்ட் ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் செய்தி வெளியிட்டார்.
அவர் என்னிடம் நாங்கள் அவர்களுக்கு ஏராளமான துப்பாக்கிகளை அனுப்பினோம். அவற்றை குர்துகளுக்கு அனுப்பினோம் என்று கூறினார். மேலும், குர்துகள் அவற்றை வைத்துக்கொண்டதாக ஜனாதிபதி கருதுவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து அவர், நாங்கள் போராட்டக்காரர்களுக்கு ஏராளமான துப்பாக்கிகளை அனுப்பினோம் என்றும் கூறினார்.
ஜனவரியில் அந்தப் போராட்டங்களை இஸ்லாமியக் குடியரசு ஒடுக்கிய பின்னர், அதன் ஆட்சியிலிருந்து ஈரானியர்களை விடுவிக்க வேண்டும் என்ற தனது விருப்பமே, இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானையும் தாக்கும் முடிவுக்குப் பகுதியளவு உந்துதலாக இருந்ததாக டிரம்ப் அடிக்கடி சித்தரித்து வருகிறார்.

Post a Comment