பிரான்சில் பாரவூர்தி மோதியதில் அதிவேக டிஜிவி தொடருந்து தடம் விலகியது


வடக்கு பிரான்சின் புல்லி-லெஸ்-மைன்ஸ் நகரில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையளவு கடவையில் சரக்கு ஏற்றப்பட்ட பாரவூர்தி ஒன்றுடன் மோதிய விபத்தில் அதிவேக TGV தொடருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏராளமான அவசரகால சேவைப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டனர்.

அந்த பாரவூர்தி இராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அதன் ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

காலை சுமார் 7:00 மணியளவில் (0500 GMT) டன்கிர்க் நகரிலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த தொடருந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரண்டு தொடருந்துப் பயணிகள் பலத்த காயமடைந்ததாகவும், மேலும் 11 பேர் சிறு காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்தனர்.


No comments