ஈரானில் உள்ள ரயில் பாதைகள், பாலங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - நெதன்யாகு அறிவிப்பு


ஈரானில் உள்ள ரயில் பாதைகள், பாலங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக நெதன்யாகு கூறுகிறார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு, ஈரானில் உள்ள ரயில் பாதைகளையும் பாலங்களையும் இஸ்ரேலிய இராணுவம் இன்று குறிவைத்ததாகவும், அவை ஐ.ஆர்.ஜி.சி-யால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் எந்த ஆதாரமும் வழங்காமல் கூறினார்.

அந்த உரையில், நேற்று இஸ்ரேல் போக்குவரத்து விமானங்களையும் டஜன் கணக்கான ஹெலிகாப்டர்களையும் அழித்தது என்றும், அவை ஐ.ஆர்.ஜி.சி-யால் பயன்படுத்தப்பட்டவை என மீண்டும் ஆதாரமின்றி அவர் கூறினார்.

No comments