ஈரானில் சில வாரங்களிலேயே வெற்றி பெற்றுவிட்டோம் - அமொிக்கா
வியட்நாம் மற்றும் ஈராக்கில் நடந்ததைப் போன்ற பல பத்தாண்டுகள் நீடித்த போர்களுடன் ஒப்பிட்டு, ஈரானில் வெறும் சில வாரங்களிலேயே ஒரு தீர்க்கமான இராணுவ வெற்றியை அடைந்துவிட்டதாகக் கூறி பீட் ஹெக்ஸெத் தொடங்குகிறார்.
இறுதியில் ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது என்று கூறும் அவர், தங்களது இந்தத் திட்டத்தை உலகிற்கான ஒரு பரிசு என வர்ணிக்கிறார்.
இந்தப் பணி புதிய கட்டத்தில் தொடர்கிறது என்றும், ஈரானுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம், ஒரு விவேகமான ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை விதித்துள்ள இரும்புப் பிடி முற்றுகையை ஹெக்ஸெத் குறிப்பிடுகிறார், அது நாளுக்கு நாள் மேலும் வலுப்பெற்று வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.

Post a Comment