கோத்தபாய வைத்ததியர்கள் களத்தில்?
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆதரவு மருத்துவர்கள் தற்போதைய அரசிற்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும், நாளை (05) அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment