ஈரான் ஒப்பந்தம் செய்தாலும் செய்யாவிட்டாலும் நாம் வெற்றி பெறுவோம் - டிரம்ப்


ஈரான் ஒப்பந்தம் செய்தாலும் செய்யாவிட்டாலும் நாம் வெற்றி பெறுவோம் என்று டிரம்ப் கூறுகிறார்.

ஈரானில் நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர், என்ன நடந்தாலும் சரி, நாம்தான் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் மேலும் கூறுகையில்:-

நாம் அந்த நாட்டை முழுமையாகத் தோற்கடித்துவிட்டோம். எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம் ஒருவேளை அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்யலாம், செய்யாமலும் போகலாம். அது ஒரு பொருட்டல்ல. அமெரிக்காவின் பார்வையில், நாம்தான் வெற்றி பெறுகிறோம் என்றார்.

என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் ஈரானுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

ரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் சில நீர் கண்ணிவெடிகளை வீசியிருக்கலாம் என்றும், அமெரிக்கா தற்போது அந்த ஜலசந்தியை சல்லடை போட்டுத் தேடி வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஹோர்முஸ் ஜலசந்தி விஷயத்தில் நேட்டோ அமெரிக்காவிற்கு உதவவில்லை என்று அவர் கூறினார்.

ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பினால் சீனா பெரும் சிக்கல்களைச் சந்திக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments