வாடகை முரண்பாட்டில் முதியவர் படுகொலை


வவுனியாவில் வீட்டு வாடகை முரண்பாட்டினால் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 72 வயதான முதியவர் தனது வீட்டு மலசல கூடத்திற்கு அருகில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார். 

சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்த நிலையில் , அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , முதியவர் படுகொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட  விசாரணைகளில் முதியவருக்கு பிறிதொருவருக்கும் இடையில் வாடகை பணம் தொடர்பிலான பிரச்சனை இருந்ததாகவும் , அதனாலையே முதியவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments