விலை மனு- ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு?

 


இலங்கையில் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

கப்பலில் 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13)  முறைப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.


No comments