கடந்த ஒரு மாதத்தில் 52,000 லீட்டருக்கும் அதிகமான எரிபொருட்களுடன் 31 பேர் கைது


நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 03 முதல் நேற்று (04) வரை மேற்கொள்ளப்பட்ட  இந்த கைது நடவடிக்கையின் போது 47,006 லிட்டர் டீசல், 2,668 லிட்டர் பெற்றோல் மற்றும் 2,706 லிட்டர் மண்ணெண்ணெய் உட்பட 52,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments