உக்ரைன், சவூதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
எதிர்கால ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கு அடித்தளமிடும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உக்ரைனும் சவூதி அரேபியாவும் கையெழுத்திட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
எங்கள் நிபுணத்துவத்தையும் அமைப்புகளையும் சவூதி அரேபியாவுடன் பகிர்ந்து கொள்ளவும், உயிர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த இணைந்து செயல்படவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,என்று உக்ரைன் அதிபர் எக்ஸ் தளத்தரில் எழுதினார்.

Post a Comment