சவூதி விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகிது!
சவூதி விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக , ஒரு வட்டாரம் வெள்ளிக்கிழமை அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தது.
ஈரானின் வான்வழித் தாக்குதல் என நம்பப்படும் சம்பவத்தில் பல விமானங்களும் சேதமடைந்தன.
பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Post a Comment