ஈரான் 20-வது நாள்டு போர்: எந்தெந்த எரிசக்தி தளங்கள் ஈரான் தாக்கியது?


ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக , ஈரான் பல வளைகுடா நாடுகளின் எரிசக்தி ஆலைகள் மீது

தாக்குதல் நடத்தி, அந்நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

கத்தார்: கத்தார் ராஸ் லஃபான் தொழிற்பேட்டை மீது வியாழக்கிழமை அதிகாலையில், கத்தாரின் முக்கிய எரிவாயு நிலையமான ராஸ் லஃபான் தொழிற்பேட்டை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதில் கணிசமான சேதம் ஏற்பட்டதாக கத்தார் தெரிவித்தது 

குவைத்: குவைத் நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ (31 மைல்) தெற்கே அமைந்துள்ள மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ஒரு பிரிவின் மீது ட்ரோன் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் பெட்ரோலியக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

குவைத், மினா அப்துல்லா சுத்திகரிப்பு நிலையம்: நாட்டின் தென்பகுதியில் உள்ள மினா அப்துல்லா சுத்திகரிப்பு நிலையம் மீதும் ட்ரோன் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹப்ஷான் எரிவாயு நிலையம் மற்றும் பாப் எண்ணெய் வயல், இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளிலிருந்து சிதறி விழுந்த பாகங்களால் ஹப்ஷான் எரிவாயு நிலையங்களிலும், பாப் எண்ணெய் வயலிலும் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பதிலளித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சவூதி: சவூதி அரேபியாவின் யான்பு துறைமுகத்தில் உள்ள சவூதி அராம்கோவின் சம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. 

No comments