காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கே முதலிடம்


யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று  பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்து விரிவான விளக்கமளித்தார்.

"யாழ்ப்பாணம் படைத் தலைமையகம் அகற்றப்படவுள்ளதாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மிகக் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவுமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன." - என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்:

"நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை விடுவிக்கும் போது, 'தேசிய பாதுகாப்பு' என்பற்கே முதலிடம் வழங்கப்படும்.

பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அனைத்துத் தரப்புகளுடனும் விரிவாக ஆராய்ந்த பின்னரே காணி விடுவிப்பு தொடர்பான இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும்.

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது. என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்

No comments