வடமாகாண சுற்றுலா:சிக்கி சீரழிகிறதா?
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழான சுற்றுலாப்பணியக பணிப்பாளர் வடக்கு ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறையின் பின்னடைவுகளையடுத்தே இடமாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே வேலணை - மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதனால் முறைப்பாடு இன்று (11) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட "எக்கோ ரூறிசம்" திட்டம் தோல்வியடைய அன்றிருந்த அரச அதிகாரிகளே காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் அன்றைய யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன், அன்றைய காலப் பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக இருந்த சுகுணாரதி தெய்வேந்திரம் மற்றும் தற்போதைய வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதேச செயலருமான அ.சோதிநாதன் ஆகியிரால் வேலணை பிரதேசத்திற்கு சுமார் 77 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே இறங்கு துறையை அமைப்பதற்காக 50 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யபட்டது.
2016 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கடந்த பல வருட காலமாக வேலணை கடற்கரையில் பாவனையின்றி அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றனதெனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment