படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment