பெட்ரோல் விலை 400 ரூபாயை அண்மித்தது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
அதன்படி, ரூ. 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை ரூ. 81.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 398.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ. 365.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 455.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ. 303.00 ஆக இருந்த லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 79.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 382.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ. 353.00 ஆக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 443.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ. 195.00 ஆக இருந்த லங்கா மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை ரூ. 60.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 255.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment