கட்டைக்காட்டு படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்டைக்காடு சென்.மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது.
அதன் போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் மாலை அணிவித்து சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை படுகொலையை நினைவுகூரும் நினைவுத் தூபிக்கான அடிக்கலும் நாட்டப்பட்டது.
1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் தேதி அதிகாலை சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடற்பரப்பில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் டோரா படகுகளில் வந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.




Post a Comment