கறுப்புக்கொடி : சர்ச்சையாகிறதா??
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, போராட்டத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
சுதந்திர தினத்தையோஅல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தை தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது.
எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகிறார்கள்? ஏன் ஊர்வலங்களைம் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் நடாத்துகிறார்கள்? என்பதற்கு அரசாங்கம் சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும்.
கடந்த 04ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கருதுகின்றது.

Post a Comment