பயங்கரவாத்திற்கு ஊக்குவிப்பு: டெலிகிராம் நிறுவனர்ஜமீது குற்றவியல் வழக்கைத் தெடங்கியது ரஷ்யா


டெலிகிராம் செயலியில் புதிய தடைகள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மாற்றீட்டிற்கான அழுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியில், டெலிகிராம் நிறுவனர்  பாவெல் துரோவ் மீது ரஷ்யா பயங்கரவாதம் தொடர்பான குற்றவியல் வழக்கைத் தொடங்கியுள்ளது என்று ரஷ்ய அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யா குற்றவியல் விசாரணையைத்  தொடங்கியது.

இரண்டு ஊடகங்களும் ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸை (FSB) குறிப்பிட்டு, 2022 முதல் 153,000 க்கும் மேற்பட்ட குற்றங்களில் டெலிகிராம்  பயன்படுத்தப்பட்டதும், இதில் நாசவேலை, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட 33,000 குற்றங்களும் அடங்கும் என்றும் கூறியுள்ளனர்.  

கட்டுரைகள் துரோவ் ரஷ்ய அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்ததாகவும், சட்டவிரோத உள்ளடக்கத்தை நீக்குமாறு ரஷ்யாவின் ஊடக கண்காணிப்பு அமைப்பான  ரோஸ்கோம்நாட்ஸரின் 150,000 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டின.

No comments