ஜப்பான் தேர்தல்: தகைச்சி பெரும்பாண்மை பெறுவார்: கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பானின் தேசியவாத ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன, இதன் மூலம் பிரதமர் சானே தகைச்சிக்கு வலுவான புதிய ஆட்சிக் காலம் கிடைத்துள்ளது .
தகைச்சியின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் சுமார் 300 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரும்பான்மைக்கு தேவையான 233 இடங்களை விட மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சியான ஜப்பான் புதுமைக் கட்சி (JIP) உடன் சேர்ந்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) 310 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேசிய ஒளிப்பாளரான (NHK) தெரிவித்துள்ளது.
பிரதமர் சானே தகைச்சியின் பொறுப்பான, முன்னெச்சரிக்கை நிதிக் கொள்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றோம். என்று LDP பொதுச் செயலாளர் ஷுனிச்சி சுசுகி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தகைச்சி, குறிப்பாக இளைய வாக்காளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தாலும், கடந்த ஏழு தசாப்தங்களில் பெரும்பாலான காலமாக நாட்டை ஆண்ட அவரது பழமைவாத எல்.டி.பி, ஊழல்களால் பாதிக்கப்பட்டு , ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை எதிர்கொண்டது என்பது நினைவூட்டத்தக்கது.

Post a Comment