எளிமையான ஜனாதிபதியென ...!


எளிமையான ஜனாதிபதியென பிரச்சாரப்படுத்தப்பட்ட அனுரவின் யாழ்ப்பாண வருகைக்கான செலவீனம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

கச்சதீவிற்கான உற்சவ கால செலவீனம் தொடர்பில் தன்னிடம் தற்போதே ஊடகங்கள் கேள்வி எழுப்புவதாக யாழ்.மாவட்ட செயலர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சம் செலவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தைமாதம் பொங்கல் தினத்தில் வட மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை ஆரம்பித்து வைத்த நிலையில் அன்று மாலை வேலணையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அன்றைய தினமே மானிப்பாய் மருதடி ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.

மறுநாள் யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் “முழு நாடுமே ஒன்றாய்” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வுக்கான நிதியை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பெடுத்த நிலையில் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து பெரும் எடுப்பில் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வுக்காக மண்டப ஒழுங்கமைப்பு சுமார் 52 இலட்சமும் பொதுமக்களi ஏற்றி இறக்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 23 இலட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

யாழில் தைப்பொங்கல் மறுநாள் இடம் பெற்ற ஒரு நிகழ்வுக்கு மாத்திரம் ஒரு கோடிக்கு மேற்பட்ட பாரிய ஒ தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.


No comments