ஆட்சி மாறியும் பொலிசாரின் சிந்தனைகளில் மாற்றம் இல்லை
புதிய அரசாங்கத்தின் காலத்தில் கூட பொலிசாரின் மனோநிலை , சிந்தனைகளில் மாற்றம் ஏற்படாது தமிழ் மக்களுக்கு எதிராக சட்டத்தை கேலி கூத்தாக்கும் பல வழக்குகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர் என மூத்த சட்டத்தரணி நல்லதம்பி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளில் சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
மஹிந்த ராஜபக்சே ஆட்சி காலம் முதல் பொலிஸார் சட்டத்தை கேலி கூத்தாக்கும் பல வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது ஏதோ எல்லாமே மாறி வருவதாக கூறுகிறார்கள் ஆனால் இந்த புதிய அரசாங்கத்தின் காலத்தில் கூட இவ்வாறான வழக்குக தாக்கல் செய்யப்பட்டு வருவது ஊடாக பொலிசாரின் மனோ நிலை மற்றும் சிந்தனைகளில் இன்னமும் மாறவில்லை என்பது தெரிகிறது
இதன் ஊடாக அவர்கள் பெரிய செய்தியை சொல்கின்றார்கள். இதனை தமிழ் மக்கள் எவ்வளவு விரைவாக புரிந்து கொள்கின்றனரோ அவ்வளவுக்கு நல்லது. நாங்களாக மாற்றும் வரையில் எதுவும் தானாக மாறாது என தெரிவித்தார்.

Post a Comment